கச்சத்தீவுக்கு புறப்பட்ட இந்து மக்கள் கட்சியினர்


கச்சத்தீவுக்கு புறப்பட்ட இந்து மக்கள் கட்சியினர்
x
தினத்தந்தி 16 Aug 2023 1:15 AM IST (Updated: 16 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் கச்சத்தீவை மீட்க புறப்பட்டபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திண்டுக்கல்

'கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும்' என்று வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று இந்து மக்கள் கட்சியினர் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்தனர். இதையொட்டி நேற்று திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி முருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அங்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து மாநில இளைஞர் அணி துணை தலைவர் மோகன்குமார் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்பாண்டியன் உள்பட பலர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

கோவிலில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் இந்து மக்கள் கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கச்சத்தீவுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என்பதால், அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு இந்து மக்கள் கட்சியினர் மறுத்ததால், லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து போலீசார் சமசரம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story