திருச்செந்தூரில் திங்கட்கிழமை பனை தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்செந்தூரில் திங்கட்கிழமை பனை தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இம்முகாமை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பனைமரத் தொழிலாளர்கள் மற்றும் பனைத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம் திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மகாலில் நடக்கிறது. முகாமுக்கு தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்குகிறார்.
நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் வீட்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்லூரி படிப்புக்கான உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் சிகிச்சைக்கு கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணத்துக்கு உதவித்தொகை மற்றும் இழப்பீடு தொகை, வயது முதிர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற அரசினால் வழங்கப்படக்கூடிய பல்வேறு சலுகைகளை பெற்று பயனடையலாம்.
எனவே பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தெரிவித்து உள்ளார்.