உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு முகாம்


உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

மேலக்கிடாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மதுரை சின்ன உடைப்பில் அமைந்துள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் கல்வி திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது வங்கியில் வழங்கப்படும் கடன்கள், வங்கியின் சேவைகள் குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு எடுத்துக்கூறினார்.

மேலும் மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் ஆகியவை ரூ.11 கோடி அளவில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், அனைவரும் கடன் பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சரக துணை பதிவாளர் சுப்பையா, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக இயக்குனர் தர்மராஜ், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசுவரன், மதுரை மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் உதயகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேசுவரி, சங்க செயலாளர் முருகேசன் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story