தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

சேலம் மாநகராட்சி 14-வது வார்டு பகுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

சேலம்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14-வது வார்டு குமாரசாமிப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதற்கு பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவை வேணுகோபால் ஆகியோர் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தனர். அதன்படி ஒவ்வொரு வீடு, வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் 15-வது வார்டு செயலாளர் தமிழ்செல்வன், கவுன்சிலர் வசந்தா மயில்வேல், பிரதிநிதிகள் ரமேஷ்பாபு, வெள்ளிமணி, வக்கீல் விஜயகுமார், அருள், வெங்கடேஷ், காதர், அல்பர், சாவித், தஸ்தகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story