மெஞ்ஞானபுரம்பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை- அசன விழாவியாழக்கிழமை நடக்கிறது


மெஞ்ஞானபுரம்பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை- அசன விழாவியாழக்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை- அசன விழா வியாழக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

பரி.பவுலின் ஆலயம்

மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா கடந்த 17-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வட இந்தியப் பணித்தள விசுவாசிகளின் கலாசார நிகழ்ச்சி, மெஞ்ஞானபுரம் லவ்லி பிரெண்ட்ஸ் குழுவினரின் சென்னை விடுதலையின் வாசல் ஊழியங்கள் நற்செய்தி கூட்டங்கள், மெஞ்ஞானபுரம் அன்னை ஏ.செல்வராஜ் வழங்கிய ஜெயிக்கப் போவது யார்? நிகழ்ச்சி, பொது மகமை சங்கத்தாரின் மார்ட்டின் தேவ பிரசாத் சாஸ்திரியார், சாரா மார்ட்டினின் இசை வழி நற்செய்தி, ஸ்தாபனங்களின் கலை நிகழ்ச்சி ஆகியன நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை, 11 மணிக்கு அசன வைபவ மங்கள கால் நடுவிழா, மாலை 3.30 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் ஆரம்பப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா, மாலை 4.30 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை, இரவு 7.30 மணிக்கு ஆயத்த ஆராதனை ஆகியன நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன் அருளுரை வழங்கினார்.

அசன வைபவம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான அசன வைபவத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு 176-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது.

ஆராதனையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் திமோத்தி ரவீந்தர் அருளுரை வழங்கினார். காலை 6 மணிக்கு ஜாண்தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், காலை 6.15 மணிக்கு உலையேற்றும் வைபவம், மாலை 4 மணிக்கு அசன வைபவம், இரவு 10 மணிக்கு வான வேடிக்கையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பொது மகமை சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெயபோஸ், செயலாளர் நவமணி ராபர்ட், பொருளாளர் சொர்ண ராஜ், இணைச் செயலாளர் செல்வின், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ். ஒய்வு பெற்ற திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், திருப்பணிவிடையாளர்கள் நவராஜ், சாமுவேல் ரவி ராஜ், மற்றும் சபை மக்கள் செய்துள்ளனர்.


Next Story