ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி


ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி
x

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.அன்பு வரவேற்றார்.

இதில், 11 கல்லூரிகள் பங்கு பெற்றன. வேலூர் கூடைப்பந்து கழக உறுப்பினர்கள் நடுவர்களாகக் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி முதலிடமும், வேலூர் ஊரீசு கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கே.எம்.ஜி. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆர்.ரஞ்சிதம், ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஞானக்குமார், எம்.ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story