கைதிகளுக்கு மனநல ஆலோசனை முகாம்


கைதிகளுக்கு மனநல ஆலோசனை முகாம்
x

திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனை முகாம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்கான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். முகாமையொட்டி சிறையில் உள்ள 270 கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 13 பேருக்கு மனநல ஆலோனைகள் வழங்கப்பட்டன. மனநல மருத்துவர்கள் முருகராஜா, டீன்வெஸ்லி, மனநல சீராய்வு மன்ற உறுப்பினர் முத்துசாமி, செல்வராஜா ஆகியோர் கைதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

அப்போது வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பதால் மனஅழுத்தம் ஏற்படும். இதேபோல் ஒருசில தீய பழக்கங்களுக்கு அடிமையான நபர்கள் அதை மறக்க முடியாமல் சிரமப்படலாம். அதனால் தூக்கமின்மை ஏற்பட்டு மனஅழுத்தத்துக்கு உள்ளாக நேரிடும். எனவே தீய பழக்கங்களை மறக்க வேண்டும். சமுதாயத்தில் ஒழுக்கமான மனிதர்களாக திருந்தி வாழ வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அதை விடுத்து தவறான செயல்களில் இறங்க கூடாது என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


Next Story