மெரிட் கல்லூரி பட்டமளிப்பு விழா


மெரிட் கல்லூரி பட்டமளிப்பு விழா
x

அம்பை அருகே இடைகால் மெரிட் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள இடைகால் மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மெரிட் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சுப்பிரமணியன் விழாவை தொடங்கி வைத்தார். கல்வி குழுமத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெனட் ஆண்டறிக்கை வாசித்தார். மெரிட் கல்வி குழுமத்தின் துணை சேர்மன் நாகலெட்சுமி, நிர்வாக தலைவர் ஓம்பிரகாஷ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் கல்லூரி கல்வி இயக்கக முன்னாள் துணை இயக்குனர் ராமசுப்பிரமணியன், இணை இயக்குனர் பேராச்சி கார்த்திக் உள்பட பலர்கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் காளி கிருஷ்ணன், செயல் இயக்குனர் எட்வின் லாரன்ஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story