மின்மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும்


மின்மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும்
x

மின்மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஜோலார்பேட்டையை அடுத்த சக்கரகுப்பம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே அப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆழ்துளை கிணறுக்கான மின் மோட்டார் மீட்டர் பெட்டி சரிந்து விழுந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிழே சரிந்து விழுந்த மின் மோட்டாருக்கான மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.


Next Story