மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடங்க ஆய்வு அறிக்கை தயார்


மெட்ரோ ரெயில் சேவை திட்டம்            தொடங்க ஆய்வு அறிக்கை தயார்
x

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடங்க ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடங்க ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் திட்டம்

சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை எந்தெந்த வழித்தடங்களில் அமைக்க முடியும் என்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டாக திருச்சியில் ஆய்வு நடத்தியது. இந்த தொலைநோக்கு ஆய்வறிக்கையை நேற்று நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது.

இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த அழகப்பன் விளக்கி கூறினார். அதில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நகரத்துக்கு பொதுபோக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி மாநகரில் ஓராண்டு காலம் 803.75 சதுரகிலோ மீட்டரில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

68 கிலோ மீட்டர் தூரம்

அதன்அடிப்படையில் சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம்பஸ் நிலையம், தில்லைநகர், வயலூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை, பஞ்சப்பூர் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை 26 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடமும், ஜங்ஷன் முதல் விமானநிலையம், புதுக்கோட்டைரோடு, சுற்றுச்சாலை வரை 23.3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்களில் மொத்தம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பன்னோக்கு வாகன நிறுத்துமிடம்

இதன் ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி, அதன் மூலமாக மத்திய அரசிடம் இருந்து இந்த திட்டத்துக்கான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறினார்.

மேலும், 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல ஜங்ஷன் உள்பட 9 இடங்களில் வழித்தடம், காந்திமார்க்கெட் பகுதியில் சரக்கு ஒருங்கிணைப்பு மையம், இன்னும் 4 இடங்களில் பன்னோக்கு வாகன நிறுத்தும் இடம், ஸ்மார்ட் சிக்னல்கள் என பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன.


Next Story