மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 115 மீட்டர் தூரத்தில் மெட்ரோ சுரங்கப்பாதை- கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 115 மீட்டர் தூரத்தில் மெட்ரோ சுரங்கப்பாதை- கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 115 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா கூறினார்.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 115 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா கூறினார்.

நேரடி ஆய்வு

மதுரை நகரில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில் ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரைஉள்ள 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 27 ரெயில் நிறுத்தங்கள் வருகின்றன. அதிலும் கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய 3 நிறுத்தங்கள் சுரங்கப் பாதை ரெயில் நிலையங்களாக அமைக்கப்பட உள்ளன. இந்த மெட்ரோ ரெயில் பணிகளை துரிதப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ச்சுனன் ஆகியோர் மதுரை மாநகரில் நேரடி கள ஆய்வு செய்தனர்.

அதன்பின் ரமேஷ் சந்த் மீனா கூறியதாவது:-

திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோவில், புதூர், மாட்டுத்தாவணி ஆகிய இடங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் பணிமனை அமைய உள்ள தோப்பூர் ஆகிய இடங்களில் சீரமைப்பு பணிகள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தோம். திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்கள் அமைவிடங்களில் இந்திய தொல்பொருள் ஆய்வு தளத்தில் இருந்து மெட்ரோ ெரயில் நிலையங்கள் எவ்வளவு தூரம் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சுரங்கப்பாதை

இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோவில்களின் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டருக்கு மேல் மதுரை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரில் இருந்து 115 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து 160 மீட்டர் தொலைவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த கோவில்களின் அருகில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் போது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், மதுரை மீனாட்சி அம்மன் திருகோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கலைச்செல்வன், விக்னேஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story