கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்


கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
x

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொங்கு மண்டல மாநாடு

திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையத்தில் நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, ஷபீக் அகமது, வி.எம்.அபுதாஹிர், கோவை மண்டல செயலாளர் அப்துல் ஹக்கீம், கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா, நீலகிரி மேற்கு மாவட்ட தலைவர் அப்துல்பஷீர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் முஹஸின் காமினூன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் பீர்முகம்மது, சேலம் மாவட்ட தலைவர் அப்சர் அலி, கோவை வடக்கு மாவட்ட தலைவர் நவுபல், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொறுப்பாளர்கள்

இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகத் தலைவர் ஹைதர் அலி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திருவடிக்குடில் சுவாமிகள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக்முகைதீன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

12 தீர்மானங்கள்

மாநாட்டில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், தமிழக தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும், தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும், பொது சிவில் சட்டம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு நன்றி கூறினார். மாநாட்டில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதனால் திருப்பூர் மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.



Related Tags :
Next Story