மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

சேலம்

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரத்து 996 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 597 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 111.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story