மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,500 கன அடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,500 கன அடியாக குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,500 கன அடியாக குறைந்தது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 21,700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததன் காரணமாக நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,500 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடி எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 17,000 கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படுகிறது. அதே நேரத்தில் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story