எம்.ஜி.ஆர். சிலையில் காவித்துண்டு


எம்.ஜி.ஆர். சிலையில் காவித்துண்டு
x

எம்.ஜி.ஆர். சிலையில் காவித்துண்டு இருந்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

மதுரை கே.கே.நகரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர் சிலையில் நேற்று மதியம் மர்ம நபர், காவித்துண்டை அணிவித்து சென்றது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எம்.ஜி.ஆர் சிலை மீது இருந்த காவி துண்டை அகற்றினர். சிலைக்கு காவித்துண்டை அணிவித்தது யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story