மஜ்ரா கொல்லப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பா?- போலீசார் விசாரணை


மஜ்ரா கொல்லப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பா?- போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:30 AM IST (Updated: 30 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

மஜ்ரா கொல்லப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் இரும்பாலை அருகே மஜ்ரா கொல்லப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் மூக்கு, கை சேதம் அடைந்து இருந்தது. இதை பார்த்த அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலையை யாராவது உடைத்தார்களா? என விசாரணை நடத்தினர். அப்போது மழை, வெயிலின் தாக்கத்தால் சிலை உடைந்து சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலையை சிமெண்டு கலவை பூசி சரி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story