எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்க வேண்டும்


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்க வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் ராணிப்பேட்டை மாவட்டம், அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உருவாக்கப்பட்டு, உடனடியாக ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவரால் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ராணிப்பேட்டை மாவட்டமும், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் உருவாவதற்கு காரணம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவர் சார்ந்துள்ள அ.தி.மு.க. இயக்கமுமே ஆகும். எனவே புதிதாக திறக்க இருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்புறம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை வைப்பதே சாலப் பொருத்தமாக இருக்கும். எனவே இருவரின் சிலைகளையும் புதிய கலெக்டர் அலுவலம் முன்பு வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட துணை செயலாளர் எம்.ஏ.சம்மந்தம், ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story