நுண்ணியல் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம்
நம்பரை கிராமத்தில் நுண்ணியல் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கலவையை அடுத்த நம்பரை கிராமத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. திமிரி வட்டார வேளாண்மை துறை சார்பில் நடந்த முகாமுக்கு வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கனகா வரவேற்றார்.வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் பேசுகையில், ''திமிரி வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது. பயிருக்கு தேவையான பாசன நீரின் அளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்பவும் பயிர் வகைக்கேற்பவும் சொட்டு நீர், தெளிப்பு நீர், மற்றும் மழைத்தூவான் போன்றவைகள் அமைத்திட இத்திட்டம் வழிவகை செய்யும் என்றார்.
வேளாண்மை அலுவலர் திலகவதி பேசுகையில், நுன்னீர் பாசன திட்டம் எவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்வது என்பது குறித்தும்தேவையான ஆவணங்கள் பற்றியும் விளக்கினார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சங்கர் செய்திருந்தார்.