விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி
திருமருகல் அருகே விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி நடந்தது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அலகுகளில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.நுண்ணீர் பாசன கம்பெனியின் மண்டல மேலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நுண்ணீர் பாசனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றி பேசினார்..துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் நடப்பு சம்பா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிந்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story