ஆரல்வாய்மொழி அருகே ஊருக்குள் புகுந்த மிளா வாகனம் மோதி சாவு
ஆரல்வாய்மொழி அருகே ஊருக்குள் புகுந்த மிளா வாகனம் மோதி இறந்து கிடந்தது.
கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் 4 வழிச்சாலையில் நேற்று காலை 8 மணிக்கு மிளா ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் இறந்து கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் அசோக், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மிளாவை மீட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் கிறிஸ்டோபால் ராய் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனச்சரக அலுவலக வளாகத்திலேயே மிளா புதைக்கப்பட்டது. வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த மிளா விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story