மிலாது நபி விழா பொதுக்கூட்டம்


மிலாது நபி விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் மிலாது நபி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகர மிலாது நபி கமிட்டி சார்பில் மிலாது நபி விழா பொதுக்கூட்டம் காயிதேமில்லத் திடலில் நடைபெற்றது. கமிட்டி தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். கமிட்டி நெறியாளர்கள் ஹாஜா முகைதீன், முகமது மீரான், ஜபருல்லா கான், பொறியாளர் அப்துல் ஜப்பார், ஆசிரியர் கலீல் ரகுமான், முகம்மது கனிபா, முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகம்மது முஸ்தபா ஆலிம் கிரா அத் ஓதினார். கமிட்டி பொருளாளர் அக்பர் அலி வரவேற்றார். கவிஞர் முஸ்தபா கமால், கவிதை பாடினார் தென்காசி மாவட்ட அரசு காஜி முகைதீன் யூசுப் அன்சாரி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் சாகுல்ஹமீது, மிலாது நபி கமிட்டி செயலாளர் குத்புதீன், கமருதீன், எழுத்தாளர் இப்ராகிம், அப்துல்லா ஜமாலி ஆலிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி உள்பட பலர் பங்கேற்றனர். மிலாது நபி கமிட்டி துணை தலைவர் அப்துல் மஜீத் ஆலிம் நன்றி கூறினார்.


Next Story