சென்னையில் மிலாது நபி ஊர்வலம் - மாநாடு


சென்னையில் மிலாது நபி ஊர்வலம் - மாநாடு
x

சென்னையில் மிலாது நபி ஊர்வலம் - மாநாடு நேற்று நடந்தது. இதில் தமிழக அரசின் தலைமை காஜி பங்கேற்றார்.

சென்னை,

சென்னை மாநகர மிலாது கமிட்டி சார்பில் மிலாது நபி ஊர்வலம், சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு கமிட்டி பொதுச்செயலாளர் ஏ.கே.தாஜூதீன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.எம்.தாஹா ஆலிம் மிஸ்பாஹி, துணை பொருளாளர் கே.எம்.நிஜாமுதீன், கொள்கை பரப்பு செயலாளர் கே.ஏ.ஷாஹூல் ஹமீது உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அங்கப்ப நாயக்கன் தெருவில் தொடங்கி மூக்கர் நல்லமுத்து தெருவில் உள்ள சென்னை பேலஸ் அருகே நிறைவடைந்தது.

தேசிய ஒற்றுமையை வளர்க்க

சென்னை பேலஸ் வளாகத்தில் சென்னை மாநகர மிலாது கமிட்டி பொன்விழா மற்றும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவையொட்டி மிலாது நபி மாநாடு நடந்தது. இதில் கமிட்டியின் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.டி.அப்துல் முர்தலா, சென்னை மாவட்ட ஜமாஅதில் உலமா சபை தலைவர் வி.எஸ்.அன்வர் பாஷா உலவி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஏ.கே.தாஜூதீன் கூறுகையில், "சென்னை மாநகர மிலாது கமிட்டி சார்பில் கடந்த 49 ஆண்டுகளாக மிலாது நபி ஊர்வலம் - மாநாடு நடந்து வருகிறது. சாதி-மத-இன வேற்றுமை மறந்து, தேசிய ஒற்றுமையை வளர்த்திடவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நபிகள் நாயகத்தின் போதனைகளை எடுத்துரைக்கவும் இதுபோன்ற விழாக்கள் வாய்ப்பாக அமைந்து வருகிறது", என்றார்.


Next Story