மிலாதுநபி, காந்தி ஜெயந்தி தினங்களில்மதுக்கடைகளை மூடகலெக்டர் உத்தரவு
மிலாதுநபி, காந்தி ஜெயந்தி தினங்களில் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது
ஈரோடு
மிலாது நபியான நாளையும் (வியாழக்கிழமை), அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்றும் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அந்த 2 தினங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், எப்.எல்.2 கிளப்கள், எப்.எல்.3 ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினங்களில் மது விற்பனை நடப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story