நெல்லுக்கடை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம்


நெல்லுக்கடை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நெல்லுக்கடை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம்

நாகப்பட்டினம்


நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் விரதமிருந்து தங்கள் குடும்பத்தினருடன் பால் குடங்களை சுமந்து வந்து எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து எல்லை அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா மற்றும் செடில் உற்சவம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.


Next Story