பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பூமி பூஜை
மன்னார்குடியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது
திருவாரூர்
மன்னார்குடி;
மன்னார்குடி மேம்பாலம் அருகில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு மூடப்பட்டது. சிதிலமடைந்து கிடக்கும் அந்த இடத்தில் தற்போது மீண்டும் ரூ.39 லட்சத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகர தி.மு.க. செயலாளர் கணேசன், நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பொது மேலாளர் ரவி, உதவி பொது மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story