முத்து மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாபால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி, பூந்தோட்டம் பகுதியில் ஆதி சக்தி விநாயகர், முத்து மாரியம்மன், துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி காலை 6.30 மணிக்கு ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து முனியப்பன் கோவில், அரசமரம், பெருமாள் கோவில் வழியாக பெண்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர், முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம், மண்டல பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, பாப்பாரப்பட்டி, பூந்தோட்டம் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story