பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
திருவெண்காடு:
பூம்புகாரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு பால் உற்பத்தி விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்த கோரியும், கால்நடை வளர்ப்போருக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனங்களை வழங்க கோரியும், ஆண்டுதோறும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பால் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் அகோரம், ரவி, கோவிந்தராஜ், அய்யப்பன், செல்வம், ரமேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story