பால் தின விழா


பால் தின விழா
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் பால் தின விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தேசிய பால் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய ஆவின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். ஆவின் பால் பெருக்கு மற்றும் இடுபொருள் உதவி பொது மேலாளர் டாக்டர் வெங்கடேசன் வரவேற்றார். விழாவில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பால் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நுகர்வோர்களுக்கும், சிறந்த விற்பனையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பால் உற்பத்தியை பெருகிடவும், கால்நடை வளம் மேம்படவும், தரமான பால் உற்பத்தி செய்திடுவோம் என கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஒன்றிய ஆவின் துணை தலைவர், பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்க செயலாளர்கள், கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆவின் விரிவாக்க அலுவலர் கொளஞ்சி நன்றி கூறினார்.


Next Story