கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டர் 1-க்கு ரூ.42 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.51- ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டுத்தீவனம், புண்ணாக்கு, பருத்தி விதை, மருத்துவ செலவு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மாடுகளுக்கு சரியான நேரங்களில் தடுப்பூசி வழங்க வேண்டும், கோவில்பட்டி குளிரூட்டும் நிலையத்தில் நிரந்தர பொறுப்பாளர் நியமிக்க வேண்டும், மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் நியூட்டன், துணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் வீரபுத்திரன், லிங்கம், மாவட்ட செயலாளர் ராமசுப்பு, மாநில துணை தலைவர் சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story