மோட்டார் சைக்கிள் மீது பால் லாரி மோதி சிறுவன் பலி


மோட்டார் சைக்கிள் மீது பால் லாரி மோதி சிறுவன் பலி
x
தினத்தந்தி 7 July 2023 10:00 PM IST (Updated: 9 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

பனமடங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் லாரி மோதி சிறுவன் பலியானான்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள பனமடங்கி, இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் விஷ்ணு (வயது 15). வடுகந்தாங்கல் அடுத்த காளாம்பட்டு கிராமம், கீழ் அச்சுக்கட்டு மெயின் ரோட்டில் சிறுவன் விஷ்மு நேற்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது வேலூரில் இருந்து பரதராமி நோக்கி வந்த பால் லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சிறுவன் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானான்.

இது குறித்து, பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் பால் லாரி டிரைவர் ரமேஷ் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story