பால் வேன் மோதி மீன் வியாபாரி பலி


பால் வேன் மோதி மீன் வியாபாரி பலி
x

பால் வேன் மோதி மீன் வியாபாரி பலியானார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள அரசூர் கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பழையாறு துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தற்காஸ் கிராமம் அருகே அவர் சென்றபோது சீர்காழியிலிருந்து பால் ஏற்றி வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் இறங்கி நின்றது. இதில், படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story