பால் வேன் டிரைவருக்கு கத்திக்குத்து; விவசாயி கைது
தலைவாசல் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் பால் வேன் டிரைவரை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் பால் வேன் டிரைவரை கத்தியால் குத்திய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
தலைவாசல் அருகே உள்ள தெடாவூர் தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 25). தனியார் பால் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த விவசாயி பிரதீப் (27).
இந்த நிலையில் பிரதீப்பின் மனைவிக்கும், ஜெகதீசிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதீப்பின் மனைவியை ஜெகதீஷ் அழைத்து ெசன்று விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கத்திக்குத்து
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஜெகதீஷ் பால் வேனை ஓட்டிக்கொண்டு வேப்பம்பூண்டியிலிருந்து ஆறகளூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்். அப்போது அவரை பிரதீப் வழிமறித்து, என் மனைவியை அழைத்துச் சென்று என் குடும்பத்தை ஏன் கெடுத்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த பிரதீப், கத்தியால் ஜெகதீசை சரமாரியாக குத்தி உள்ளார்்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜெகதீசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பை கைது செய்தனர்.