மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி
வடமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்
வடமதுரை அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 30). பால் வியாபாரி. இவரது வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று முன்தினம் மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே எலக்ட்ரீசியன் வேலை செய்த அனுபவம் இருந்ததால், மின் இணைப்பை சரி செய்வதற்காக டிரான்ஸ்பார்மரில் பால்பாண்டி ஏறியதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பால்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பால்பாண்டிக்கு ஆனந்தி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story