தென்னை நார் மில்லில் தீ விபத்து


தென்னை நார் மில்லில் தீ விபத்து
x
திருப்பூர்

தென்னை நார் மில்லில் தீ விபத்து

முத்தூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் அப்பகுதியில் தென்னை நார் மில் நடத்தி வருகிறார். இந்த மில் ஒரு பகுதியில் தென்னை நார் கழிவுகள் குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு நார் மில்லில் தென்னை நார் கழிவுகளின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பணியாளர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

இது பற்றிய தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வே.பிரபாகரன், பி.வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் 2 வண்டிகளில் வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நார் கழிவு குவியல்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story