கள்ளக்காதலியை கொலை செய்த மில் தொழிலாளி கைது


கள்ளக்காதலியை கொலை செய்த மில் தொழிலாளி கைது
x

கள்ளக்காதலியை கொலை செய்த மில் தொழிலாளி கைது

மதுரை


மதுரை வில்லாபுரம் பகுதியை் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே மாவுமில்லில் வேலை செய்த, சிந்தாமணி கங்காநகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை, செல்வம் வீட்டில் பாண்டியம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பாண்டியம்மாளை, செல்வம் கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் தீவிர விசாரனை நடத்தினர். இந்தநிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட ஆத்திரத்தில், தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தாகவும் அவர் தெரிவித்து உள்ளதாக போலீசார் கூறினர்.


Next Story