வாகனம் மோதி மிளா சாவு


வாகனம் மோதி மிளா சாவு
x

சேரன்மாதேவியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மிளா பலியானது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மிளா பலியானது.

மிளா சாவு

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - களக்காடு பிரதான சாலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கரடி, கடமான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் சேரன்மாதேவி - களக்காடு சாலையில் தனியார் கல்லூரி அருகே நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் மிளா பலியானது. மிளா இரைத்தேடி வந்தபோது வாகனம் மோதி பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

எச்சரிக்கை பலகை

கடந்த சில நாட்களுக்கு முன் களக்காடு வனத்துறையினர், சேரன்மாதேவி - களக்காடு சாலை கொழுந்துமாமலை பீட் பகுதியில் வாழைத்தார் கழிவுகளை வீசி செல்வதால், வனவிலங்குகள் வாழைத்தார் கழிவுகளை உணவாக உட்கொள்வதற்காக சாலையோரங்களில் உலா வருவதால் அவை விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது எனவும், மேலும் வன விலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மிளா இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story