மேல்மலையனூர் அருகேகோட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்
மேல்மலையனூர் அருகே கோட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே பெருவளூர் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்துக்கு அபிஷேக அலங்காரம் செய்தவுடன் கொடியேற்றப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற1-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர். விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.