செஞ்சி அருகேவைக்கோல் கட்டுகளுடன் தீப்பிடித்து எரிந்த மினிலாரிடிரைவர் உள்பட 2 பேர் உயிர்தப்பினர்


செஞ்சி அருகேவைக்கோல் கட்டுகளுடன் தீப்பிடித்து எரிந்த மினிலாரிடிரைவர் உள்பட 2 பேர் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே வைக்கோல் கட்டுகளுடன் மினிலாரி தீப்பிடித்து எரிந்தது.

விழுப்புரம்


செஞ்சி,

தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் மினி லாரியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் 150 வைக்கோல் கட்டுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். மினி லாரியை மாரியப்பன் என்பவர் ஓட்டினார்.

அப்போது, செஞ்சியை அடுத்த மட்டப்பாறை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக வைக்கோல் கட்டுகள், அந்த பகுதியில் சென்ற மின்கம்பியில் உரசி, தீப்பற்றியது.

உடன் டிரைவர் மாரியப்பன், அவருடன் வந்த திருப்பதி ஆகியோர் வாகனத்தில் இருந்து கீழே குதித்து உயிர்தப்பினர். இதற்கிடையே தீ மளமளவென பரவி மினி லாரி முழுவதும் பற்றி எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டுகளுடன் மினிலாரி முழுவதும் எரிந்து சேதமானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story