பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி


பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி
x

பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், 'சுதந்திரத்தை போற்றுவோம்' என்ற முழக்கத்துடன் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு தலைைம தாங்கி, கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மாணவர்கள், பொதுமக்கள் என 8 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய போட்டியானது ஐகிரவுண்டு பள்ளிக்கூடத்தில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு, சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டாக சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம். சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த மினி மாரத்தான் தொடங்கும் மைதானம் பெயரை தாங்கி உள்ள வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்டோரின் தியாகம் போற்றுதலுக்கு உரியது. உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்து உள்ளார். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை போற்றி, பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட தலைவர் இசக்கியப்பன், மாவட்ட பொருளாளர் அருள், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சஞ்சய், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, நெல்லை மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் ராமகுரு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுடலைராஜ், அரசு போக்குவரத்து கழக சங்க தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story