புதுப்பேட்டையில்மினிபஸ்- ஆட்டோ டிரைவர்கள் மோதல்3 பேர் கைது


புதுப்பேட்டையில்மினிபஸ்- ஆட்டோ டிரைவர்கள் மோதல்3 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டையில் மினிபஸ்- ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டனா். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்


புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்துள்ள பனப்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பேட்டை வழியாக பண்ருட்டிக்கு தனியார் மினி பஸ் ஒன்று சென்றது. பஸ்சை வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் சச்சின் என்பவர் ஓட்டினார். புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது, அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவை எடுக்குமாறு அதன் டிரைவர் சதீஷிடம் சச்சின் கூறியுள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் சதீஷ், அவரது நண்பர் அஜித்குமார் மற்றும் சிலருடன் சேர்ந்து பஸ் டிரைவரை தாக்கியுள்ளனர். இதில், சச்சின், சதீஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக கூறி, போலீஸ்காரர் ஜெயமூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார்செய்தார். அதன்பேரில், ஆட்டோ டிரைவர்கள் சதீஷ் (வயது 26), அஜித் குமார் (24) மற்றும் பஸ் டிரைவர் சச்சின் ஆகிய மூன்று பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story