மினிபஸ்- லாாி மோதல்; 10 பேர் படுகாயம்
திருவாரூர் அருகே மினிபஸ்சும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் அருகே மினிபஸ்சும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மினிபஸ்- லாரி மோதல்
திருவாரூரில் இருந்து பள்ளிவாரமங்கலத்துக்கு நேற்று மதியம் ஒரு மினிபஸ் சென்றது. இந்த பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ்சை திருவாரூரை சேர்ந்த ஜெகன் என்பவர் ஓட்டி வந்தார். கேக்கரை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வளைவில் பஸ் திரும்பியது. அப்போது எதிரில் மண் ஏற்றி வந்த லாரியும், மினிபஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் மினிபஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.
லாரி டிரைவருக்கு வலைவீச்சு
உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாாி டிரைவரை தேடி வருகிறார்கள்.