அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆறுதல்
காங்கயம் அருகே முத்தூர் சாலை, வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியும், கொடுமுடியில் இருந்து வந்த வேனும் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்களை காங்கயம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில் "விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (வயது50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்" என்றார்.