ரூ.2½ கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்


ரூ.2½ கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்
x

காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.2½ கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.2½ கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

ரூ.2½கோடியில் பணிகள்

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மறவபாளையம், கீரனூர், பரஞ்சேர்வழி, நத்தக்காடையூர், மருதுறை, பழையகோட்டை ஆகிய 6 ஊராட்சிக்குப்பட்ட நகர, சுற்று வட்டார கிராம பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற உள்ளது.

அதன்படி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள், தனி நபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள், சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் சிறுபாலம் அமைக்கும் பணிகள், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள், ரேஷன் கடை கட்டும் பணிகள் உள்பட பல்வேறு புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ளது.

அடிக்கல் நாட்டு விழா

இதன்படி மறவபாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.26 லட்சத்து 98 ஆயிரத்திலும், கீரனூர் ஊராட்சியில் ரூ.20 லட்சத்து 89 ஆயிரத்திலும் பரஞ்சேர்வழி ஊராட்சியில் ரூ.91 லட்சத்து 34 ஆயிரத்திலும் நத்தக்காடையூர் ஊராட்சியில் ரூ.43 லட்சத்து 10 ஆயிரத்திலும்,மருதுறை ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 41 ஆயிரத்திலும், பழையகோட்டை ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 69 ஆயிரத்திலும், புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இவைகளுக்கான அடிகள் நாட்டு விழா நேற்றுகாலை நடைபெற்றது.

விழாவிற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட 6 ஊராட்சிகளிலும் மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 41 ஆயிரத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், துணைத்தலைவர் ஜீவிதாஜவகர், காங்கயம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதாசிவகுமார் (மறவபாளையம்), ஈஸ்வரமூர்த்தி (கீரனூர்), தங்கராசு (பரஞ்சேர்வழி), என்.செந்தில்குமார் (நத்தக்காடையூர்), செல்விசிவக்குமார் (மருதுறை), எம்.மீனாட்சி (பழையகோட்டை), கவுன்சிலர்கள் எம்.செல்வம்ராமசாமி, ரவி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகரன், ராகவேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story