ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு


ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு
x

ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு


ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக குயவன் திட்டு, சுப்பிரமணி நகர், ரங்கம்பாளையம், அண்ணா நகர், சேனாதிபதி பாளையம், சத்யா நகர், சாஸ்திரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பள்ளம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நேதாஜி ரோடு, ஆம்ரோஸ் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்கிடும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முகாமில்...

அதைத்தொடர்ந்து குயவன்திட்டு, பெரும்பள்ளம் ஓடை மேற்கு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதி மற்றும் அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் குடிநீர் சரியான முறையில் கிடைக்க அதிகாரிகளிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மேலும் சேனாதிபதி பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கியதை பார்வையிட்டு, நீர்வழி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அடைப்பு ஏற்பட்ட இடங்களை விரைந்து சரி செய்திடவும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

இதைத்தொடர்ந்து அமைச்சர், சித்தோடு நல்லகவுண்டன் பாளையம் மற்றும் பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் பிரதான குழாய்கள் பதிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைவாக முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story