கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது


கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது
x

கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.

ஈரோடு


கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது:-

கொரோனோ மீண்டும் வருமோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. உலகின் சில இடங்களில் பாதிப்புகள் இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

படுக்கை வசதி

மாவட்டத்தில் மொத்தமாக 3 ஆயிரத்து 406 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் இருக்கின்றன. அதைதேவையான சூழல் ஏற்பட்டால் மேலும் 400 படுக்கைகள் அளவிற்கு அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கடந்தமுறை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அதையும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள டாக்டரை அணுகி சோதனைகள் செய்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாங்களாக முன்வந்து பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசியை 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். எனவே 2-ம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டு கொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் 4 நாட்களுக்குமேல் வரவில்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துதுறை அதிகாரிகளும் தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருந்து தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் என்.பொன்மணி, சுகாதார துணை இயக்குனர் சோமசுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, மாநகர மருத்துவ அலுவலர் பிரகாஷ், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளிசத்தியமூர்த்தி, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story