அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
காய்ச்சலால் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேசக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story