அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சரை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவருமான சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் பிறந்த நாள் விழாவையொட்டி, ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆறுமுகநேரி லைட் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. அங்குள்ளவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, கட்டில் போன்றவையும் வழங்கப்பட்டது.

கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவருமான சதீஷ்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், நாலுமாவடி பஞ்சாயத்து துணை தலைவர் ராஜேஷ், குரும்பூர் செந்தில், ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்க முன்னாள் தலைவர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூரில் தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சாயர்புரம் மெயின் பஜாரில் ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


Next Story