அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு


அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
x

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகை புரிந்து ஆய்வு செய்தார். அப்போது புற நோயாளிகள் பிரிவுக்கு சென்று நோயாளிகள் பதிவேடுகள், சிகிச்சை அளிக்கும் பிரிவு, தொற்றுநோய் பரிசோதனை பிரிவு, ஊசி போடும் பிரிவு, மருந்து கட்டும் பிரிவு, மருந்தகம் மற்றும் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, ஆய்வகம், மருந்து கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், ஆஸ்பத்திரியில் விஷகடி மருந்துகள் இருப்பு உள்ளதா? என ஆய்வு செய்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளிடமும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குமரவேல், நிர்மல் குமார், திருமுருகன், சித்த டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story