முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கீழ்பென்னாத்தூர் அருகே முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர் இளம்பகவத், சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன்,
மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.