தூத்துக்குடி பள்ளி விழாவில் அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்


தூத்துக்குடி பள்ளி விழாவில் அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்
x

தூத்துக்குடி பள்ளி விழாவிற்கு அழைக்காத அதிகாரிகளை அமைச்சர் கீதாஜீவன் கண்டித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் கூடம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது அங்கு அரசு விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதனால் அங்கு சென்ற அமைச்சர் அதிகாரிகளை கண்டித்தார். அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெறும் போது இங்கே இருக்கும் உள்ளூர் அமைச்சர் மற்றும் மேயரை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்காக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் விழாவில் பங்கேற்றார்.


Next Story